விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட செயலாளர்களையும், மண்டல செயலாளர்களையும் அறிவித்தார். அதன்படி திருச்சி மாநகர மேற்கு மாவட்டத்திற்கு புல்லட் லாரன்ஸ், திருச்சி மாநகர கிழக்கு மாவட்டத்திற்கு வரதன் என்கிற கனியமுதன், திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு வழக்கறிஞர் கலைச்செல்வன், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு சக்தி ஆற்றல் அரசு, திருச்சி கிழக்கு மாவட்டத்திற்கு குருஅன்புச்செல்வன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருச்சி மற்றும் கரூர் மண்டல செயலாளராக தமிழாதன், மண்டல துணைச் செயலாளராக பொன்.முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுளனர். புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் இன்று ( 31.07.2023 ) காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள், பிரபாகரன், வழக்கறிஞர் தங்கதுரை, அரசு, BHEL சந்திரசேகர், வழக்கறிஞர் பழனியப்பன், ஜெயக்குமார், சரவணன், தினேஷ், சந்தனமொழி, பெரியசாமி, மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.