திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கருப்பையா(39) பி.காம் பட்டதாரி. இந்து கள்ளர் வகுப்பைச் சேர்ந்த இவர், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, குழந்திரான் பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி விமலா. இந்த தம்பதிக்கு கே.ஆர்.குருநாத் பன்னீர்செல்வம் என்கிற மகனும், கே.ஆர்.மகிபால் நன்னி என்கிற மகளும் உள்ளனர். இவர், கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பின் நடந்த அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் கழக பணியாற்றியுள்ளார்.கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் அன்னதானம் வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் கழக மூத்த முன்னோடிகளை கவுரவித்து பொற்கிழி வழங்கி வருகிறார். கோடை காலத்தின் போது கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள் வழங்கி வருகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார். கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பிலான லேப்ராஸ்கோப் வழங்கி உள்ளார். பலமுறை மருத்துவ முகாம்களும் அமைத்துள்ளார். மாணவர்களுக்கு கல்வி நிதியும் வழங்கியுள்ளார். 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு கணினி மற்றும் பிரிண்டர் வசதி, மிதிவண்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் வழங்கியுள்ளார்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 949
Comments are closed, but trackbacks and pingbacks are open.