Rock Fort Times
Online News

தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்- காரணம் இதுதான்…!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. வழக்கம்போல இன்றும் (ஏப்ரல் 8) பேரவை தொடங்கியது. அப்போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். பேரவையில் அதிமுகவினருக்குப் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வந்ததாக காரணம் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, நேற்று(ஏப். 7) பேரவையில் ‘அந்தத் தியாகி யார்?’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை அதிமுக உறுப்பினர்கள் சட்டையில் குத்தியிருந்தனர். இதற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி கோரி, அதிமுக உறுப்பினர்கள் கடுமையாகக் கூச்சல் எழுப்பிய நிலையில், அப்போது, அனுமதியின்றி பதாகைகளைக் காண்பித்தவர்களில் அடையாளம் காணப்பட்ட 14 அதிமுக உறுப்பினர்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தநிலையில், இன்று அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்