Rock Fort Times
Online News

லால்குடியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்- முன்னாள் அமைச்சர் செம்மலை, முன்னாள் எம்பி ப. குமார் பங்கேற்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அதிமுக மற்றும் பிற கட்சிகள் தற்போதையிலிருந்த தே கட்சிப் பணிகளை தொடங்கி உள்ளன. அதிமுக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்தவகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, வடக்கு ஒன்றியம் அப்பாதுறை, எசனகோரை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்தல், கட்சி வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தல், இளம் தலைமுறை வாக்காளர்களை அதிமுகவில் சேர்ப்பது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான செ.செம்மலை, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியு மான ப.குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். கூட்டத்தில் லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.எம்.பாலன், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம்.அருண் நேரு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக் , மாவட்ட தலைவர் தாமஸ், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயாபாபு, பரசுராமன், பேரவை பாஸ்கரன், ராஜ்குமார், ஐடி பிரிவு தனசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை கழக, நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்