Rock Fort Times
Online News

அ.தி.மு.க. தான் பா.ஜ.க.வுக்கு அடிமையாக இருக்கிறது…!அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செந்தில் பாலாஜி கைதுக்கு பின் தி.மு.க.அமைச்சர்கள் பயந்து போய் உள்ளார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். எங்களைப் பார்த்தால் பயந்தது போலவா தெரிகிறது?. எதிர்க்கட்சித் தலைவர் அப்படி தான் பேசுவார். யார், யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க.தான் பா.ஜ.க. விற்கு அடிமையாக இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். நாங்கள் யாரைப் பார்த்தும் அஞ்ச மாட்டோம். தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரிலிருந்து சரியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பேசி தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை முதலமைச்சர் பெற்று தருவார். ஆளுநருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் அவர் அவ்வப்போது டெல்லி சென்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்