Rock Fort Times
Online News

திருச்சி நந்திக்கோவில் தெரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்கள்..! அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்…

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டில் உள்ள நந்திக்கோவில் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினசரி பல்வேறு மருத்துவ சேவைகளுக்காக பொதுமக்கள் வருவதால் இட வசதிக்காக கூடுதல் கட்டிடங்கள் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு, இன்று (பிப்.6) திறப்பு விழா நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இவ்விழாவில் மண்டல தலைவர் மு.மதிவாணன், 13-வது வார்டு திமுக கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்