Rock Fort Times
Online News

234 தொகுதிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,500 மாணவர்களை சந்திக்கிறாா் நடிகர் விஜய்..

நடிகா்  விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அவரது மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளன்று அந்த தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அரசியல் கட்சியை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை அவர் சந்தித்து நிதி உதவி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஒரு தொகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனா். தாய்- தந்தையை இழந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் விஜய் சந்தித்து நிதி உதவி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்