திருச்சி ஜங்ஷனில் உள்ள ஆதார் சேவை மையம் இரவு 8 மணி வரை செயல்படும்…
முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தகவல்..
திருச்சி ஜங்ஷன் ரயில்வே சந்திப்பில் இயங்கி வரும் ரயில்வே அஞ்சல் சேவை அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சேவை மையம் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆதார் மையம் இயங்கும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி அஞ்சல் சேவை முதல் நிலை கோட்ட கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.