பொன்மலை ரயில்வே பணிமனையில் ரூ.50 லட்சம் மின் மோட்டார்கள் திருடிய 2 பேர் கைது…
கவனக்குறைவாக இருந்த 3 பேர் பணி இடை நீக்கம்... வீடியோ இணைப்பு
திருச்சி பொன்மலை பகுதியில் இயங்கி வரும் ரயில்வே பணிமனையில் 5000 த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள், என்ஜின்கள் மற்றும் புகழ் வாய்ந்த ஊட்டி மலை ரயில் எஞ்சின்கள் பழுது பார்க்கும் பணிகள் நடக்கின்றன. இங்கு வெளிமாநில மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்வே பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்கள் லாரிகளில் கொண்டு வருவதும், பணிமனையிலிருந்து உதிரி பாகங்களை வெளியே கொண்டு செல்வதும் வழக்கம்.இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.
அந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது , அதில் ரயில் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் ஒன்று இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பணிமனையில் இருந்து மின் மோட்டாரை திருடி அதன் மேலே மணலை கொட்டி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால், மணிகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கிரண், சப்-இன்ஸ்பெக்டர வெங்கடாசலம், காவலா் சதீஷ்குமார் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மண்டல முதன்மை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.