Rock Fort Times
Online News

திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே குவியல், குவியலாக கிடந்த ஆதார் அட்டைகளால் பரபரப்பு…

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட பயன்பாடுகள், வங்கி சேவைகள் என அனைத்து வகையான தேவைகளுக்கும் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. அதேநேரம் ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் ரகசியமாக திருடப்படுவதாகவும், போலி ஆதார் அட்டைகள் புழக்கத்தில் உள்ளதாகவும் புகார்கள் உள்ளன. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு வரப்பட்ட ஆதார் அட்டைகள் குவியல், குவியலாக கொட்டிக்கிடப்பதாக தகவல் பரவியது. இதில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆதார் அட்டைகள் இடம்பெற்றிருந்தன. அதில், வங்கி கணக்கு ஐஎஃப்எஸ் குறியீட்டு எண்களும் குறிக்கப்பட்டு இருந்ததால் வங்கிக்கணக்கு தொடங்கவோ அல்லது வங்கிகளின் கடன் உள்ளிட்ட வேறு பயன்பாடுகளுக்காகவோ பெறப்பட்டவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்றாலும் உண்மை அட்டைகளும் அவற்றுள் கலந்து கிடப்பது எவ்வாறு என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து ஆதார் அட்டைகளை இங்கு கொட்டி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்