திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 48 ) சமையல் கலைஞர். இவா் தனது வீட்டிற்கு வந்த உறவினர்களை வழியனுப்பவதற்காக தனது மனைவி விஜயலட்சுமியுடன் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் சென்றுவிட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பியுள்ளாா். சென்னை பைபாஸ் சாலை காவேரி பாலத்தின் அருகாமையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர்களை வழிமறித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கண்ணன் கோட்டை போலீசில் புகார் அளித்தாா். அவரது புகாாின் போில் இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.