திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர். துறையூர் கண்ணனூரை சேர்ந்த கந்தசாமி மனைவி ராணி(40) என்பவர் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது திடீரென தனது கூடையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ராணியிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, சொத்து தகராறு காரணமாக தனதுஅக்கா மகன் மீது ஜம்பு நாதபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தேன். இதனால் என்னை அக்கா மகன் தாக்கினார். இதுகுறித்து புகார் மனு அளிப்பதற்காக காவல் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் அங்கபுகார் மனு வாங்காமல் திட்டி அனுப்பிவிட்டனர். இதனால் தீக்குளிக்க முயன்றேன். சொத்து பிரச்னையை தீர்த்து வைப்பதுடன் என்னை தாக்கிய அக்கா மகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.