Rock Fort Times
Online News

ஈரோடு அருகே ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோவில் திருவிழாவில் சோகம்!

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நல்லகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி(56). இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணா மலையார் கோயிலில் பூசாரியாக இருந்தார். அந்தகோயிலில் தற்போது திருவிழாநடந்து வருகிறது. இந்நிலையில், திருவிழாவைெயாட்டி 20-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் கோயில் வளாகத்தில் வெட்டப்பட்ட நிலையில், பழனிசாமி உட்பட 5-க்கும்மேற்பட்ட பூசாரிகள் ஆட்டு ரத்தத்தை குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் பழனிசாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பழனிசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கோபி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்