திருச்சியில் கத்தியால் கிழித்துக்கொண்டு தலை தெரிக்க ஓடிய நபர்… காரணம் தெரிந்ததும் அதிர்ந்த பொதுமக்கள்! (வீடியோ இணைப்பு)..
திருச்சி கோட்டை ரயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர்,திருச்சியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் உறையூர் கல்நாயக்கன் தெரு பகுதியில் வசிக்கும் தர்மலிங்கம் என்ற நபர் 4 வருடங்களுக்கு முன்பு, சுகாதாரத்துறை ஆய்வாளர் பணி பெற்றுத் தருவதாக கூறி ரூ.9 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் தற்போது வரை அவருக்கு எந்த வேலையும் பெற்றுத்தரவில்லை என கூறப்படுகிறது. மேலும்,தர்மலிங்கம் 4 வருடங்களாக தலைமறைவாகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அல்லிமால் தெரு அருகே ஜெகன்நாதன், தர்மலிங்கத்தை பார்த்துள்ளார். அப்போது அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்க முற்பட்டபோது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் தனது கை மற்றும் கழுத்தை தானே கிழித்துக்கொண்டதோடு சிங்காரத்தோப்பு , சூப்பர் பஜார் வழியாக தப்பி ஓடியுள்ளார். அவரைப் பின்தொடர்ந்த ஜெகன்நாதன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து அவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தர்மலிங்கம் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாகவும், தன்னை அமைச்சர் பி. ஏ. என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் ரத்த காயத்தில் இருந்த தர்மலிங்கத்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இரவு பரபரப்பு ஏற்பட்டது
Comments are closed, but trackbacks and pingbacks are open.