திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வள்ளுவன் (வயது 45 ). இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 நாட்களாக வீட்டில் இருந்தார் .தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ( 29.09.2023 ) வீட்டில் யாரும் இல்லாத போது வள்ளுவன் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு கம்பியில் வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் உதயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.