Rock Fort Times
Online News

அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு…!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தஞ்சாவூரில் அமமுகவின் 4-வது  பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று(07-10-2024) காலை தொடங்கியது.  கூட்டத்தில், பொதுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒருமித்த ஆதரவுடன் டிடிவி தினகரன் மீண்டும் பொதுச் செயலாளராக செய்யப்பட்டார்.  டிடிவி தினகரன் கடந்த 2018- ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அமமுக, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்