திருச்சியில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..!
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நியமனம் வழங்கும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப். 7) நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இம்முகாமை துவக்கி வைத்தார். இதில் உற்பத்தித் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களான எம்.ஆர்.எப்., ரானே, செயின்ட் கோபேன், டிவிஎஸ் மோட்டார்ஸ், லூகாஸ், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், யமஹா மோட்டார்ஸ், போஷ்க், மதர்சன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. காலை முதல் முகாமில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பதிவு செய்து நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்று வரும் முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்புகள் வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.என். நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் எல்.மதுபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.

Comments are closed.