திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீபன் (32). இவர், 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 10 -ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பிரதீபனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று ( 21.08.2023 ) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. போக்சோ வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பிரதீபனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் வழங்கி நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு தரப்பில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதில், அரசு தரப்பு வழக்குரைஞராக எம்.கே.ஜாகீர் உசேன் ஆஜரானார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.