சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு…!
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு இன்று(03-06-2024) இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. 182 பயணிகள் விமானத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது துரைப்பாக்கம் பகுதியில் இருந்து விமான நிலைய எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கொல்கத்தா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து பயணிகள் அனைவரும் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், பாதுகாப்பு படையினர் விமானம் முழுவதும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்றது. விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது
Comments are closed.