இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு சுற்றுலா விமான பயணத்திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 7 நாட்கள்
காசி-கயா சிறப்பு யாத்திரை சுற்றுலா சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல, 13 நாட்கள்
சாா்தாம் சுற்றுலா யாத்திரை சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் விடுதி, உணவு, சுற்றுலா மேலாளர், பயண காப்பீடு, ஜி.எஸ்.டி. போன்றவை அடங்கும். வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி காலை 8:30 மணி அளவில் திருச்சியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஆகஸ்ட் 17-ம் தேதி மீண்டும் திருச்சியை வந்தடைகிறது.
நாள் 1 – திருச்சி -அயோத்தியா சென்றடைந்த உடன் இரவு தங்குதல்.
நாள் 2 – அயோத்தியாவில் உள்ள கோவில் மற்றும் ஆன்மீக சுற்றுலாத் தலங்களை பார்த்துவிட்டு இரவு அலகாபாத்தில் தங்குதல்
நாள் 3 – அலகாபாத்தில் இருந்து வாரணாசி செல்லும் வழியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பிறகு இரவு வாரணாசியில் தங்குதல்.
நாள் 4 -வாரணாசியில் உள்ள ஆன்மீக சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பிறகு இரவு மீண்டும் வாரணாசியில் தங்குதல்.
நாள் 5- வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா சென்று இரவு தங்குதல்.
நாள் 6 – கயா பகுதியில் உள்ள ஆன்மீக தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு மீண்டும் கயாவில் தங்குதல்.
நாள் 7- கயாவில் இருந்து புறப்பட்டு பாட்னா விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைதல்.
இந்த 7 நாள் சுற்றுலாவிற்கு தனிநபருக்கு, ரூ. 49,500, 2 பேர் என்றால் 81 ஆயிரம் ரூபாய், 3 பேர் என்றால் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 ரூபாய் என பயணத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று 13 நாட்களுக்கான சுற்றுலா வருகிற அக்டோபர் 27 அன்று திருச்சியில் இருந்து புறப்பட்டு நவம்பர் 8 அன்று மீண்டும் திருச்சி வந்தடைகிறது.இதில் தனிநபருக்கு 80 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும்.
இந்த சுற்றுலா அனைத்தும் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி செயல்படுத்தப்படும் என இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.மேலும் விவரங்களுக்கு திருச்சி – 82879 32070, மதுரை – 82879 31977, 82879 32122, சென்னை -9003140682, 90031 40680, 82879 31964 என்ற செல்போன் எண்கள் மற்றும் www.irctctourism.com என்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி. கேட்டுக் கொண்டுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.