Rock Fort Times
Online News

பால் விற்பனையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…!

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). ஆவின் பால் விற்பனை செய்து வருகிறார். இவர், ராகவேந்திரா மடம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து , அவரை அரிவாளால் வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்