Rock Fort Times
Online News

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களில் திாிணாமுல் காங்கிரஸ் வெற்றி…!

பா.ஜ.க. 2வது இடத்தை பிடித்தது....

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திாிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்த இடத்தில் பா.ஜ.க.உள்ளது. மேற்கு வங்கத்தில் 73 ஆயிரத்து 887 உள்ளாட்சி பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்த 8-ம் தேதி மட்டும் 30 பேர் வன்முறையில் உயிரிழந்தனர் .தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று ( 11.07.2023 ) காலை துவங்கியது .பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது . இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 3317 கிராம பஞ்சாயத்துகளில் 2552லும், 232 பஞ்சாயத்து சமீதிகளிலும், 20 ஜில்லா பரீஷத்களில் 12லும் திாிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த இடத்தில் பா.ஜ.க. 212 கிராம பஞ்சாயத்துகள், 7 பஞ்சாயத்து சமீதிகளிலும் வெற்றி பெற்றது . இன்னும் சில இடங்களில் முடிவுகள் வர வேண்டி உள்ளது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,

கிராமப்புறங்களிலும் திாிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மக்கள் மனதில் திாிணாமுல் காங்கிரஸ் தான் உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன என்று கூறியுள்ளார். அதிக இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து திாிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்