Rock Fort Times
Online News

சென்னையில் போலீஸ்காரர் தற்கொலை…!

திருமணமான 4 மாதத்தில் துயர முடிவு..

சென்னை அயனாவரத்தில் அருண்குமார் என்ற போலீஸ்காரர் சீருடை அணிந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கம் போல , பணிக்கு புறப்பட்ட அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அருண்குமார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.  அருண்குமாருக்கு திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகிறது. அதற்குள் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார். இவரது மனைவியும் போலீஸ்காரர் தான். நெல்லையில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டநிலையில் தற்போது மற்றொரு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்