Rock Fort Times
Online News

தமிழ்நாடு ஆளுநரை நீக்க கோரி ம.தி.மு.க.சார்பில் கையெழுத்து இயக்கம்..

துரை வைகோ பங்கேற்பு..

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதே போல திருச்சியில் இன்று ( 28.06.2023 ) கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை பொதுச்செயலாளர் ரொகையா சேக் முகமது, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத்தொடர்ந்து அண்ணா சிலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர், புறநகர் வடக்கு மற்றும் தெற்கு ம.தி.மு க. நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்