திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று ( 27.06.2023 ) மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட விவசாயிகள், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பூக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை, ஸ்ரீரங்கத்தில் அரசால் கட்டப்பட்ட பூ மார்க்கெட் தற்போது வரை செயல்படாமல் உள்ளது, சாத்தார வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை கொண்டு வரும் விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் அதிக அளவு கமிஷன் பெறுகிறார்கள். இந்த காரணங்களால் பூக்களை விளைவிக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் , கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.