Rock Fort Times
Online News

திருச்சியில் 1000 பெண் தையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து 100 நிமிடங்களில் 1000 குழந்தைகளுக்கான ஆடைகள் தைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி…* நவம்பர் 29ம் தேதி நடக்கிறது!

திருச்சியில், மகளிர் தையல் கூட்டமைப்பு( Women Tailors Federation) சார்பில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து 100 நிமிடங்களில் 1,000 குழந்தைகளுக்கான ஆடைகளை தைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி வருகிற 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரம்மாண்டமாக நடக்கிறது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி, லாலி ஹாலில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு சாதனை நிகழ்ச்சி தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் 1,000 பெண் தையல் கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து 100 நிமிடங்களுக்குள் 1,000 குழந்தைகளுக்கான ஆடைகளை தைத்து உலக சாதனை படைக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் தையல் இயந்திரம் மற்றும் அதற்கான ‘கிட்-கள்’ இலவசமாக வழங்கப்படுகின்றன. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். திருச்சியில் உள்ள பிரபல தொழில் அதிபர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று குத்துவிளக்கேற்றுகின்றனர். சாதனைகளை பதிவு செய்ய வெளிநாடுகளில் இருந்து ‘ரெக்கார்டு’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் வருகை தர உள்ளனர். சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் தையல் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்