Rock Fort Times
Online News

த.வெ.க. எம்எல்ஏ கதிரவன் பெரும் முயற்சியால் மலேசியாவில் உயிரிழந்த வாலிபர் உடல் மணப்பாறை வந்தடைந்தது…!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காரைகுளத்தை சேர்ந்த துரைமுருகன் (வயது 36) என்பவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான நிலையில் அவரின் நிலை தெரியாமல் இருந்தது. பின்னர் துரைமுருகன் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மணப்பாறை த. வெ.க. சட்டமன்ற உறுப்பினரிடம் துரைமுருகனை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தியபோது துரைமுருகன் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. பின்னர்
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நிதி சார்ந்த உதவிகளை எம்எல்ஏ கதிரவன் செய்து கொடுத்தார்.
மேலும், தன்னுடைய சொந்த செலவில் துரைமுருகன் மனைவி உள்ளிட்ட 3 பேரை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து துரை முருகன் உடல் இன்று( நவம்பர் 27) அதிகாலை விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு எம்எல்ஏ கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உடல் சொந்த ஊரான காரைக்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்திய பின் இன்று தகனம் செய்யப்பட்டது. மலேசியாவில் இறந்த வாலிபரின் உடலை மீட்டு சொந்த ஊர் கொண்டு வர
பெரும் முயற்சி எடுத்த மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவனின் செயல் அப்பகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்