Rock Fort Times
Online News

சமூக ஆர்வலர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியங்களில் புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாகப் பணியாற்ற வாய்ப்பு…!

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், புதிய அலுவல்சாரா உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தகுதியான சமூக ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மற்றும் நரிக்குறவர் நல வாரியம் ஆகியவற்றில் அலுவல்சாரா உறுப்பினர்களாகப் பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சுயவிவரக் குறிப்பு, புகைப்படம், இதுவரை மேற்கொண்ட சமூகப் பணிகள் குறித்த விவரங்கள் மற்றும் காவல்துறை சரிபார்ப்பு அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.11.2026 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில், கண்காணிப்பாளர், திட்ட அலுவலகம், பழங்குடியினர் நலம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கீழ்த்தளம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 93840 47487 மற்றும் 87789 83772 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்