கோவையில் இன்று(21-11-2026) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் பார்த்திபனை தாம் திட்டியதாக ஊடகங்கள் பொய் செய்தி வெளியிடுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த செய்தியாளர்கள், “நீங்கள் அமைச்சர் பார்த்திபனை கை நீட்டி பேசுகிற வீடியோ பதிவு இருக்கிறதே?” என்றனர். இதனால் கோபமடைந்த வைகோ, “மிஸ்டர் நீங்க எந்த பத்திரிகை” என ஆவேசத்துடன் கேள்வி கேட்டார். அதேநேரத்தில் மற்ற செய்தியாளர்கள், “நீங்க அமைச்சரை கை நீட்டி பேசுகிற வீடியோ இருக்கும் போது பத்திரிகைகள் பொய் சொல்வதாக எப்படி சொல்லலாம்” என குறுக்கிட்டு கேட்டனர். ஆனால் வைகோவோ, “நீங்க திட்டமிட்டு திமுகவின் ஏஜெண்டாக வந்து இருக்கீங்க..ன்னு குற்றம் சாட்டினார். அத்துடன், “எப்படியும் பத்திரிகைகளில் வைகோ கோவையில் ஆவேசம், வைகோ கோபப்பட்டார்”ன்னு போடப் போறீங்க.. I don’t Care.. 62 வருஷமா நான் பார்க்காத விமர்சனங்களா? என்றார். அடுத்ததாக உங்களை வடிவேலுவுடன் ஒப்பிட்டு மல்லை சத்யா பேசி உள்ளாரே…என ஒரு செய்தியாளர் கேள்வி கேட்க, “முட்டா பயலுகளுக்கு எல்லாம் பதில் சொல்லமாட்டேன்” என மீண்டும் கோபப்பட்டார் வைகோ. அப்போது, “நீங்க வேணும்னே என்னை கொந்தளிக்க வைக்கனும்னே எதை வேணும்னாலும் கேட்குறீங்க… என்னை எப்படி எப்படி சீண்டனும்.. புண்படுத்தனும்னு ப்ளான் பண்ணிட்டு வர்றீங்க…என்று ஆவேசப்பட்டார்.


Comments are closed.