ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: திருவெறும்பூர் தட்டாங்குளம் மயானப்பாதையை ஆய்வு செய்தார், எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி…!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பத்தாளப்பேட்டை ஊராட்சி, கோட்டார்பட்டி பகுதியில் மயானப்பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இறந்தவர்களின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல தட்டாங்குளம் வாய்க்காலை கடந்துதான் எடுத்துச் சென்று வருகின்றனர். சேறும் சகதியும் நிறைந்த இவ்வாய்க்காலை வழிப்பாதையாக பயன்படுத்தும் மக்களின் மனக்குமுறலை நேற்று (நவம்பர் – 14 ) ராக்போர்ட் டைம்ஸில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். திருவெறும்பூர் த.வெ.க. எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி இவ்விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம். இந்நிலையில் இன்று (நவம்பர் -15) தட்டாங்குளம் வாய்க்கால் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி. உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அழைத்து உடனடியாக இப்பகுதியில் தரைப்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். எம்.எல்.ஏவின் இந்த உடனடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Comments are closed.