Rock Fort Times
Online News

சமைக்காமலே சாப்பிடும் மேஜிக் அரிசி சாகுபடி… * பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி சாதனை!

பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவர்கள் சமைக்காமலேயே சாப்பிடும் புதுவித மேஜிக் அரிசியை இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து சாதனைப் படைத்துள்ளனர். வேளாண் கல்வியை வெறும் வகுப்பறையோடு சுருக்கிக் கொள்ளாமல் நேரடி களப் பயிற்சியாக மாணவர்கள் கற்று வருகின்றனர். நிலத்தை உழுவது, நாற்றங்கால் நடுவது, இயற்கை உரங்கள் தெளிப்பது, அறுவடை செய்வது என அனைத்தையும் மாணவர்களே தங்கள் பாடத்தின் ஒரு பகுதியாக செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரிக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில், 100% இயற்கை விவசாய முறையில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தின் பிரம்புதிரா பள்ளத்தாக்கில் உள்ள சிவசாகர் பகுதியில் பயிரிடப்பட்டாலும் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று கோமல் சால். இந்த ரகத்தின் சாகுபடி காலம் நூற்றி ஐம்பது நாட்கள். மற்ற அரிசிகளை போல இதனை நெருப்பில் வேக வைத்து சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெதுவெதுப்பான நீரில் 30 முதல் 40 நிமிடங்கள் ஊற வைத்தாலே போதும். இந்த ரக அரிசி சாப்பிட தயாராகி விடும். சாதாரண வெள்ளை அரிசியை விட இதில் நார்ச்சத்து பல மடங்கு அதிகமாக இருக்கிறது.இப்படி பல்வேறு சிறப்பு மிக்கது கோமல்சால் ரகம்.இதனை கல்லூரிக்கு சொந்தமான ஐம்பது ஏக்கர் விவசாயப் பண்ணையில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற் பயிர்களை தாக்கும் கருகல் நோய் மற்றும் தண்டு துழைப்பான் போன்ற நோய்களைத் எதிர்த்து இயற்கையான சூழலுக்கு ஏற்ப வளரக்கூடியது இந்த கோமல்சால் ரகத்தின் தனி சிறப்பு. இதுபோன்ற பாரம்பரிய சூழலியல் அறிவையும், நவீன உணவு தேவையையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்கல்லூரி மாணவர்கள், தங்களுக்கான நேரடி களப் பயிற்சியை கற்றுக் கொண்டு வருவதால் எதிர்காலத்தில் துறைசார்ந்த அறிவை வளர்த்துக்கொள்வதுடன் விவசாயத்தில் காலத்திற்கேற்ற புது விவசாய புரட்சியை ஏற்படுத்த முடியும்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்