சென்னையில் இன்று(13-11-2026) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னர், அதாவது 2025-ம் ஆண்டு மட்டும் நெடுஞ்சாலைத் துறையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவது போன்ற பேட்ச் ஒர்க் பணிகளுக்காக ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் செய்துள்ளனர். 5,626 பள்ளிகள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளன. அதில்தான் 80% ஊழல் நடந்துள்ளது 5,626 பள்ளிகளை ஆய்வு செய்து தரவுகளை எடுத்துள்ளோம். இப்பள்ளிகளில் 15,661 கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இது 20 ஆண்டுகாலப் பிரச்சனை. அடுத்த 2 ஆண்டுகளில் இதை சரி செய்ய முடிவு செய்துள்ளோம். கடந்த காலங்களில் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் நிறைய டெண்டர்களை எடுத்துள்ளன. இது குறித்து புகார் அளித்துள்ளோம். தற்போதைய ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்றெல்லாம் இருக்காது. ஒரு திட்டம் தொடங்கப்படும்போது, குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத சம்பந்தப்பட்ட டெண்டர் நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைக்க உள்ளோம். அவர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.