பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம் குறித்து திருமாவளவன் சொல்வதென்ன?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு அத்தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை தேவை என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அருள் விக்னேஷ் மறுத்து வருகிறார். அமைச்சர் நிர்மல் குமாரும், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (நவம்பர் 13) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், இதை நாங்கள் சரி என்று சொல்லவில்லை. தவறு நடந்திருப்பது உண்மை என்றால் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

Comments are closed.