திருச்சி, ஸ்ரீரங்கத்தில் குப்பையில் கிடந்த 5 பவுன் தங்க நகைகள்… உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்! (வீடியோ இணைப்பு)
திருச்சி, ஸ்ரீரங்கம் இரண்டாவது வார்டு பகுதியில் இன்று(21-10-2026) திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி மற்றும் செல்வேந்திரன் ஆகியோர் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு குப்பையை தூய்மை பணியாளரிடம் வழங்கியுள்ளார்.
ஆனால், அந்த குப்பையுடன் 5 பவுன் நகைகளும் இருந்துள்ளது. இதனை கண்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக அந்த நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தனர். தாங்கள் ஏழ்மையான நிலையில் வாழ்ந்தாலும் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகளை தாங்கள் வைத்துக் கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Comments are closed.