Rock Fort Times
Online News

எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் ஒன்றுதான் – திருச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…!

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், திருச்சி விமான நிலையத்தில் இன்று(21-10-2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்
கூறுகையில், தமிழ்நாட்டின் கடன் சதவீதம் 21 சதவீதம் குறைந்துள்ளது குறித்து நிதியமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு திட்டத்தையும் சரிபார்த்து, அதன் மதிப்பீடுகளைக் குறைத்து, முறையாகச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் கூடுதல் வருவாயை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

திமுக ஆட்சிக் காலத்தில் மழைநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் தற்போது மழை நீர் வேகமாக வடிய முடிந்தது என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியது குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவரும் தங்களது ஆட்சிக் காலத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உள்ளது. தற்போது நாங்கள் கடந்த நான்கு மாதங்களில் அந்தப் பணிகளை மேலும் வேகப்படுத்தி, விரைவாக முடித்திருக்கிறோம்.முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு:- அரசியலில் நாகரிகம் என்பது மிகவும் முக்கியமானது. திராவிட இயக்கத்தின் வழியில் வந்தவர்கள், அண்ணாவின் வழியிலும், புரட்சித்தலைவரின் வழியிலும் செயல்படும்போது, காலத்திற்கு ஏற்ற வகையில் கண்ணியமான பேச்சுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். இதற்கு ஆதரவளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் ஒன்றுதான் என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்