Rock Fort Times
Online News

நற்பணி மன்ற பணிகளில் நடிகர் தனுஷ் விறுவிறு… வருகிற 25ம் தேதி மகளிர் அணியினரை சந்திக்கிறார்?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகின்றன. இந்த நிலையில் இவர் திடீரென தனது ரசிகர் மன்றத்திற்கு கொடியை அறிமுகப்படுத்தினார். அதோடு தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாகவும் மாற்றினார். திடீரென டெல்லிக்கு சென்று அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். இதனால் அவர், முதலமைச்சர் விஜயை போல அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதன் அடுத்த கட்டமாக அவர் மகளிர் அணியை உருவாக்க உள்ளார். இதற்காக அக்டோபர் 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் மாநிலம் முழுவதிலும் உள்ள மகளிர் அணி நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பில், பங்கேற்கும் அனைத்து பெண் நிர்வாகிகளுடனும் அவர் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம். நடிகர் தனுஷின் விறுவிறுப்பான நகர்வு அரசியல் நோக்கர்களால் உற்று நோக்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்