திருச்சி, தில்லைநகரில் விசாலா ஏஜென்சிஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா… * வருகிற 25ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது!
திருச்சி தில்லைநகர் சாலை ரோடு, கண்ணப்பா ஹோட்டல் அருகில், விசாலா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் புதிய லைட்டிங் மற்றும் ஹோம் டெக்கர் ஷோரூம் திறப்பு விழா அக்டோபர் 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணி முதல் 8.40 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் புதிய ஷோரூமை சௌடாம்பிகா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ். ராமமூர்த்தி திறந்து வைக்கிறார். இவ்விழாவில் எஸ்.எஸ். அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட் எஸ். சுப்பிரமணியன், ஜி.ஆர். சிட்ஸ் மற்றும் ஜி.ஆர். நிதி நிறுவனத்தைச் சேர்ந்த சி. ராமசாமி, விக்னேஷ் குழுமத் தலைவர் வி. கோபிநாதன், சௌடாம்பிகா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஆர். செந்தூர் செல்வன், சாமி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் எம்.இளமுருகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜுலு, திருச்சி மண்டலத் தலைவர் எம். தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்டத் தலைவர் வி. ஸ்ரீதர் மற்றும் திருச்சி மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த ஷோரூமில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கான நவீன விளக்குகள், பரிசுப் பொருட்கள், புகைப்படச் சட்டங்கள், கைவினைப் பொருட்கள், கேபினெட் வாஷ் பேசின்கள், எல்.இ.டி. கண்ணாடிகள், செயற்கைத் தாவரங்கள் மற்றும் தோட்டம், வெளிப்புறப் பயன்பாட்டிற்கான மரச்சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
ஆகவே இத்திறப்பு விழாவில், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விசாலா ஏஜென்சிஸ் உரிமையாளர் பி.எல். ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.