நாகையில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: 2 போலீசார் டிரான்ஸ்பர்…!
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் 137 கிலோ கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் 100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, அதில் ஆளுங் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஈடுபட்டது போன்றவை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த வழக்கில் த.வெ.க. முன்னாள் நிர்வாகி பூபாலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கடத்தல் கும்பலுடன் இரு காவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் காவலர் கீதா மற்றும் டிஎஸ்பி காவல் வாகன ஓட்டுநர் சிவா ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் .

Comments are closed.