பாரா ஆசிய விளையாட்டு: வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்- வீராங்கனைக்கு முதல்வர் விஜய் பாராட்டு… * தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவு!
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு. முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதன்-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீரர் ஜெஹான் டொரப் மதன் வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

Comments are closed.