Rock Fort Times
Online News

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாட்டம்… * தொழிற்சாலைகளில் பூஜை செய்து வழிபாடு!

இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 11-ம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒன்பதாவது நாளான இன்று(19-10-2026) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது..வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. தொழில், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு இனிப்புகள், பொரி, சுண்டல் வழங்கப்பட்டன. கல்வி நிறுவனங்களில் கலைவாணியின் திருவுருவ புகைப்படத்தின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலிட்டு வழிபட்டனர். சர்க்கரை பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை மற்றும் பழங்களை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைத்து வழிபட்டனர். மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி அதற்கும் பூஜை செய்து வருகின்றனர்.  ஆயுதபூஜையை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்