Rock Fort Times
Online News

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி… * அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம்..!

இசையமைப்பாளர் தேவா இன்று(17-10-2026) சென்னையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவா உடல் நாளை நண்பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டிற்கு இறுதிச் சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது. தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவரது இறுதி சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தேவாவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்