Rock Fort Times
Online News

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… * இபிஎஸ் குற்றச்சாட்டு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலிருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி கிலோ 100 ரூபாயை எட்டி விட்டது. சர்க்கரை கிலோ 25 ரூபாய் உயர்ந்துள்ளது. அதுபோல பருப்பு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த த.வெ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அமைச்சர்களிடம் கேள்வி கேட்டால் விலைவாசி உயரவில்லை என பதில் அளிக்கின்றனர். ஏழை, எளிய நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து 45 நாட்களுக்கு மட்டும் முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைத்தார். நேற்றுடன் அந்த 45 நாட்கள் முடிவடைந்தது. இன்று முதல் மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி முழுமையாக மேற்கொள்ள ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது முறையாக காவிரியில் தண்ணீர் வராததால் நடவு செய்ய முடியவில்லை. தமிழகத்திற்கு தேவையான நீரை முதலமைச்சர் பெற்று தராதரால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே
குறுவை சாகுபடி பாதித்துள்ளது. அதேபோல சம்பா சாகுபடியும் பாதிக்கும். எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினை உருவாகும். நாட்டு மக்கள் குறித்து எந்த அக்கறையும் முதலமைச்சருக்கு இல்லை. சென்னை வந்த பிரதமரிடம், காவிரி நீரை பெற்று தர முதல்வர் விஜய் கோரிக்கை கூட வைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கூட்டுவது போல் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை உரிய நேரத்தில் கூட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்