Rock Fort Times
Online News

வாழ்வாதாரம் காக்க மணல் குவாரிகளை திறக்க வேண்டும்… * திருச்சியில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரிகள், கடந்த 2023ம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை மற்றும் வழக்குகளுக்குப் பிறகு தொடர்ந்து முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மணல் தடையின்றி கிடைக்காமல், ஏறத்தாழ 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி, திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று(16-10-2026) கவன ஈர்ப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செல்ல ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் கலந்துகொண்டு பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணல் குவாரிகளைத் திறக்கக் கோரி லாரி உரிமையாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்