கோவை, காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம். கடந்த 2024ம் ஆண்டு முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் 2026ல் பணிகள் முடிக்கப்பட்டு இன்று(16-10-2026) திறக்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வேனில் சாலைவலம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுக தொண்டர்கள், மக்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் காந்திபுரம் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார். நூலக முகப்பில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலக கல்வெட்டை திறந்து வைத்தார். இதைடுத்து அங்குள்ள படைப்புகளை அவர் பார்வையிட்டார். பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு படைப்புகளை பார்வையிட்ட அவர், குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ ஒன்று முதல்வர் விஜய்க்கு வணக்கம் வைத்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது. தொடர்ந்து அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Comments are closed.