ஆயுத பூஜையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து திருச்சி, மானாமதுரைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்…!
சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சி, மதுரை வழியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு இன்று ( அக்டோபர் 16) வெள்ளிக்கிழமை மாலை முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை தாம்பரத்திலிருந்து இன்று 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன் புறப்படும் சிறப்பு மெமு ரயில் (அக்.17) சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். மறுமாா்க்கத்தில் மானாமதுரையிலிருந்து (அக்.17) சனிக்கிழமை காலை 10.45 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரயில் அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை தாம்பரத்திலிருந்து (அக்.17) சனிக்கிழமை இரவு 11.35 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை (அக்.18) பிற்பகல் 11 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். மறுமாா்க்கத்தில் மானாமதுரையிலிருந்து நாளை(அக்.17) காலை 10.45, அக்.20-ம் தேதி புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில் இயக்கப்படும். இதேபோல சென்னை எழும்பூரிலிருந்து இன்று (அக்.16) இரவு 9 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் சனிக்கிழமை (அக்.17) அதிகாலை 4.05 மணிக்கு திருச்சியை சென்றடையும். மறுமாா்க்கத்தில் சனிக்கிழமை (அக்.17) ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்குப் புறப்படும் மெமு சிறப்பு ரயில், அன்று பிற்பகல் 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.