நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் தோன்றுவது கட்டாயம்… * மோசடிகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!
போலி அழைப்புகள் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், வருகிற நவம்பர் 1-ம் தேதி முதல் செல்போன் அழைப்புகளில், அழைப்பவரின் பெயர் திரையில் தோன்றுவது கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது. சி.என்.ஏ.பி. என்ற அமைப்பின் மூலம் செயல்படும் இந்த வசதி 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. பிற பயனர்கள் தங்களது போனில் சேமித்து வைத்துள்ள பெயர்களுக்குப் பதிலாக, சிம் கார்டு வாங்கும் போது வாடிக்கையாளர்கள் சமர்ப்பித்த கே.ஒய்.சி (KYC) ஆவணங்களில் உள்ள அதிகாரப்பூர்வ பெயரே இனி அழைப்பின் போது திரையில் தோன்றும் என்பதால், தவறான அழைப்புகள் மற்றும் மோசடிகள் கணிசமாகக் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.