தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகச் செயல்பட்டு வந்த அருண் ஐபிஎஸ், கடந்த ஜூலை மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், மகேஸ்வரி ஐபிஎஸ்-க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. இருப்பினும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழுநேர இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ்-ஐ நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் தாம்பரம் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஐபிஎஸ், தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments are closed.