Rock Fort Times
Online News

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: இ.வி.எம்-களுக்கு ‘சீல்’வைப்பு…!

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று வந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, திட்டமிட்டபடி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் பத்திரமாகப் பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பூத் ஏஜென்ட்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் பலத்த ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற போதிலும், இவ்விரு தொகுதிகளிலுமே கடந்த 2026 பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதத்தை விடக் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்