Rock Fort Times
Online News

த.வெ.க.பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்… * தேர்தல் ஆணையத்திலும் புகார்..!

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (அக்டோபர் 4) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த தொகுதிகளில் த.வெ.க., திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே 5 முனை போட்டி நிலவுகிறது. வெற்றியை தன தாக்க அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் தாராபுரத்தில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் த.வெ.க.வேட்பாளர் சத்திய பாமாவை ‘பெட்டி பாமா’ என்றும் இந்த உருவத்தை வைத்துக்கொண்டு
அவர் எப்படி பிரச்சாரம் செய்கிறார் என்றே தெரியவில்லை என்று உருவ கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் நிர்மல் குமார்,

தாராபுரம் பிரசாரத்தில் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தந்தையும், மகனும் தங்களது வீட்டில் எப்படி நடந்துகொண்டார்களோ, அவர்களது உண்மையான முகம் என்னவோ, அதை மாற்றி மாற்றி தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தவெக வேட்பாளர் ஒரு பட்டியலினப் பெண், தனியாகப் போராடிக்கொண்டிருக்கும் பெண் குறித்து, இந்த வயதில் அவர் மோசமாகப் பேசியுள்ளார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வன்னி அரசு,

“உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான மு.க. ஸ்டாலினே இப்படிப் பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது. அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைபார்க்கிறோம். அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்குத் துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும், திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான கலைஞர். தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா?” என தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவுமியா அன்புமணி,

“யாரையும் நாம் உருவ கேலி பண்ணக்கூடாது. எத்தனையோ நல்ல நல்ல தகவல்கள் ஸ்டாலின் பேச்சில் இருந்தது. கடைசியில் அந்த வார்த்தையால் அந்த தகவல்கள் தெரியாமல், இந்த ஒரு வார்த்தை பேச்சுடைய சாரம்சத்தை சேர்த்து மாற்றிவிட்டது. உருவ கேலி என்பது கண்டிப்பாக யாராக இருந்தாலும் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தில் புகார்,

தவெக வழக்கறிஞர் பிரிவு சார்பில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெண்களைத் துன்புறுத்துதல் தடைச் சட்டம் 1998, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஆகியவற்றின் கீழ் மு.க.ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, சட்டப்படியான விசாரணையும் தண்டனை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அப்புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்