ஜப்பானின் நாகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் துப்பாக்கி சுடுதல், தடகளம், கபடி, வில்வித்தை என இந்தியக் குழுவினர் அசத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று(30-09-2026) நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் சீன அணியுடன் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சாஹில் ராஜேஷ் ஜாதவ், திருமுரு கணேஷ் மணிரத்னம் மற்றும் குஷால் தலால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் சீனாவை 238-237 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. வில்வித்தை கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தனிபார்த்தி சிகிதா மற்றும் சாஹில் ராஜேஷ் ஜாதவ்
ஜோடி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். ஏற்கனவே, இன்று காலை நடைபெற்ற மகளிர் காம்பவுண்ட் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம், சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா ஆகியோர் அடங்கிய அணியினர் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. ஆக மொத்தம் வில் வித்தை போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்க பதக்கம் கிடைத்தது.

Comments are closed.